ரெஸ்டாரண்ட் துவக்க கஞ்சா விற்ற இருவர் கைது

Added : செப் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார்-அரியூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், சிவராந்தகம் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர். இருவரையும் சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில்,

வில்லியனுார்-அரியூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், சிவராந்தகம் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர். இருவரையும் சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி(எ) கார்த்தி,29, மதகடிப்பட்டு பாளையம் சர்ச் வீதியை சேர்ந்த ஜான்சன்,28, என தெரிந்தது.கார்த்தி இரு மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிறை சென்று வெளிவந்துள்ளார். இருவரும் சேர்ந்து ரெஸ்டாரண்ட் திறக்க முடிவு செய்து, பண தேவைக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இருவரையும் கைது செய்து, இரு பைக்குகள், 3 மொபைல் போன்கள், ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.ரவுடி கைதுகருவடிக்குப்பம் பாலம் சந்திப்பில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி சுரேஷ், 28; என்பவரை,நேற்று முன்தினம் இரவு லாஸ்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.அவரது கூட்டாளிகளான லாஸ்பேட்டை விக்கி, முத்தியால்பேட்டை சாகுல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X