திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று, வெள்ளியால் செய்த வில் - அம்பு வைத்து பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி உள்ளது. முருகப்பெருமான், பக்தர் கனவில் தோன்றி கூறும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.கடந்த ஆக., 7ம் தேதி, அகத்தியர் ஜாதகம், பழைய 500 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், வெள்ளை சட்டை, பச்சை வேட்டி- துண்டு வைத்து பூஜைகள் நடந்தன.
ஒரு பக்தரின் கனவில் தோன்றியபடி, உத்தரவுப்பெட்டியில், வெள்ளியால் செய்த வில் -அம்பு வைத்து நேற்று பூஜைகள் நடந்தன.சிவாச்சார்யர்கள் கூறுகையில், 'உலகத்தில் தற்போது நடக்கும் அனைத்து துரோக செயல்களும், வேருடன் அழிக்கப்படும்; தர்மம் நிலை நிறுத்தப்படும் என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது. பக்தர்களுக்கும், ஹிந்து தர்மத்துக்கும் நடக்கும் சீர்கேடுகள் அனைத்தும் விலகும். கோவில்களின் பாரம்பரியமும், மரபுகளும் பாதுகாக்கப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE