பொது செய்தி

இந்தியா

கருணாநிதிக்கு சிலை: சட்டசபையில் வலியுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, புதுச்சேரியில், அரசு சார்பில் சிலை அமைத்திட வேண்டும்'' என சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.புதுச்சேரி சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் துவங்குவதற்கு முன் நடந்த விவாதம் வருமாறு:அனிபால் கென்னடி (தி.மு.க.,): தமிழகத்தோடு, புதச்சேரியை இணைக்க முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தவர்

புதுச்சேரி-''மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, புதுச்சேரியில், அரசு சார்பில் சிலை அமைத்திட வேண்டும்'' என சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.புதுச்சேரி சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் துவங்குவதற்கு முன் நடந்த விவாதம் வருமாறு:அனிபால் கென்னடி (தி.மு.க.,): தமிழகத்தோடு, புதச்சேரியை இணைக்க முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் கருணாநிதி. அவருக்கு, புதுச்சேரி அரசு சார்பில் சிலையும், மணி மண்டபமும் அமைக்க வேண்டும்.நாஜிம், (தி.மு.க.,): புதுச்சேரி தனித்தன்மையோடு இருக்க வேண்டும் என விரும்பிய கருணாநிதிக்கு, அரசு சார்பில் சிலை அமைத்து, மணிமண்டபம் அமைக்க வேண்டும்.எதிர்கட்சி தலைவர் சிவா: கடந்த ஆட்சியில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க முடிவு செய்யப் பட்டது. அதற்காக கமிட்டி அமைத்து, கிடப்பில் உள்ளது. பல தலைவர்களுக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் கட்டியவர் அவர். தமிழுக்கும், தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட அவருக்கு, புதுச்சேரி அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.அதற்கான இடம்கூட சட்டசபை எதிரில் தேர்வு செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் அந்த இடம் சரியில்லை என்றால், வேறு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடத்திலாவது சிலை அமைக்க வேண்டும். அவரது சாதனைகளையும், படைப்புகளையும் வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள கலைக்கூடம் அமைக்க வேண்டும்.அமைச்சர் நமச்சிவாயம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இங்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே உள்ளது. எனவே இரு தலைவர்களுக்கும் சிலை அமைத்திடலாம்.எதிர்கட்சி தலைவர் சிவா: ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் தலைவருக்கு சிலை வைக்க வேண்டும்:துணை சபாநாயகர் ராஜவேலு: இரு தலைவர்களுக்கும் சிலை வைப்பது ஏற்புடையதே. அதே நேரத்தில் புதுச்சேரி நலனுக்காக பாடுபட்ட சண்முகத்திற்கு சிலை அமைத்திட வேண்டும்.அசோக்பாபு (பா.ஜ.),: அனைத்து தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க வேண்டும்.துணை சபாநாயகர் ராஜவேலு: எனது சகோதரர் உத்திரவேலுக்கு சிலை அமைத்து கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. அதனை திறக்க வேண்டும். சுப்ரமணிய படையாச்சிக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற முடிவு கிடப்பில் உள்ளது. அனைத்து தலைவர்களுக்கும் அரசு உரிய மரியாதை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X