ராக் கல்லுாரியில் தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராக் கல்லுாரியில் தடுப்பூசி முகாம்

Added : செப் 03, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி அடுத்த பெரம்பை ராக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கிளியனுார் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத் தும் முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் முகமது நாசர் தலைமை தாங்கினார். கிளியனுார் அரசு சுகாதார மைய டாக்டர் ஜெயப்பிரகாஷ், மருத்துவ அதிகாரி விஜயபாஸ்கர், சுகாதார ஆய்வாளர்கள் கோபிநாத், சுடர், செவிலியர்கள்

புதுச்சேரி-புதுச்சேரி அடுத்த பெரம்பை ராக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கிளியனுார் ஆரம்ப சுகாதார மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத் தும் முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் முகமது நாசர் தலைமை தாங்கினார். கிளியனுார் அரசு சுகாதார மைய டாக்டர் ஜெயப்பிரகாஷ், மருத்துவ அதிகாரி விஜயபாஸ்கர், சுகாதார ஆய்வாளர்கள் கோபிநாத், சுடர், செவிலியர்கள் அனிதா,சிந்தாமணி,பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர் ரூபலிங்கம் கலந்து கொண்டார். கல்லுாரி துணை முதல்வர் ஆரோக்கியநாதன், நிர்வாக அதிகாரி அனிதா முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்த முகாமில், பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்தும் கல்லுாரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X