விற்பனை வரி விவகாரம் மாகி எம்.எல்.ஏ., புகார்| Dinamalar

விற்பனை வரி விவகாரம் மாகி எம்.எல்.ஏ., புகார்

Added : செப் 03, 2021
Share
புதுச்சேரி-சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மாகி எம்.எல்.ஏ., ரமேஷ்பரம்பத் பேசியதாவது:மாகி பகுதியில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க நிதி வழங்க வேண்டும். மீன்வளத் துறை யில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி இயக்குநர் இடத்தை நிரப்ப வேண்டும்.சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்திட்ட நிதி, 2018 முதல் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க

புதுச்சேரி-சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மாகி எம்.எல்.ஏ., ரமேஷ்பரம்பத் பேசியதாவது:மாகி பகுதியில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க நிதி வழங்க வேண்டும். மீன்வளத் துறை யில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி இயக்குநர் இடத்தை நிரப்ப வேண்டும்.சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்திட்ட நிதி, 2018 முதல் வழங்கப்படவில்லை. இதை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாகி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் மட்டும் உள்ளார். அனஸ்தீசியா மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.மாகியில் உணவு பாதுகாப்பு அதிகாரி, நகராட்சி உதவி பொறியாளர், ஜூனியர் இன்ஜினியர் ஆகிய இடங் களை நிரப்ப வேண்டும்.கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கடந்த 2013 முதல் 2017 வரை விற்பனை வரி தாக்கல் செய்து, ரசீது பெற்றுள்ளனர். தற்போது அதிகாரிகள் மீண்டும் வரி கட்ட வேண்டும் என நோட் டீஸ் அனுப்பி உள்ளனர். கொரோனா பாதிப்பால் பலர் கடைகளை மூடிவிட்டனர் தற்போது இதுபோன்ற பிரச்னையால் வியாபாரிகள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X