அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழி சிறப்பு ஒதுக்கீடு: ராமதாஸ் யோசனை

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழில் போட்டி தேர்வு எழுதுவோருக்கு மட்டும் தமிழ் வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சில திருத்தங்களை அரசு செய்துள்ளது.தமிழ் வழிக்

சென்னை:'தமிழில் போட்டி தேர்வு எழுதுவோருக்கு மட்டும் தமிழ் வழியில் படித்ததற்கான சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிகளில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சில திருத்தங்களை அரசு செய்துள்ளது.தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுக்க முழுக்க தகுதியானவர்களுக்கு மட்டும் சென்றடைவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே தமிழ் வழியில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.தமிழை பயன்படுத்துவது போட்டித் தேர்வுகளிலும் பணியிலும் தொடர வேண்டியது கட்டாயம். அதற்காக போட்டித் தேர்வுகளையும் தமிழில் எழுதுபவர்களுக்கு மட்டும் தான் தமிழ் வழி கல்விக்கான 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கூடுதல் நிபந்தனையையும் புதிய அரசாணையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


வரவேற்பு

ராமதாசின் மற்றொரு அறிக்கை:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1987ல் நடந்த தொடர் சாலை மறியல் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 21 மாவீரர்களுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும். அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X