பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சரணாலயமா புதுச்சேரி?

Added : செப் 03, 2021
Share
Advertisement
பதுச்சேரி-சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசியதாவது;சட்டசபைக்கு புதிய கட்டடம் ரூ.300 கோடி செலவில் கட்டுவதாக அறிவிப்பை பத்திரிகைகளில் தெரிவித்தீர்கள். பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு இல்லை. புதிய சட்டசபை விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி., உச்ச வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்த

பதுச்சேரி-சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம் பேசியதாவது;சட்டசபைக்கு புதிய கட்டடம் ரூ.300 கோடி செலவில் கட்டுவதாக அறிவிப்பை பத்திரிகைகளில் தெரிவித்தீர்கள். பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு இல்லை. புதிய சட்டசபை விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி., உச்ச வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்த வேண்டும்.புதுச்சேரியில் ஒரு 'பவர் சென்டர்' தான் இருக்க வேண்டும். மூன்று பவர் சென்டர் உள்ளது. முதல்வர் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால் கவர்னர், தலைமை செயலர் என உள்ளது.வருவாய் துறையில் மொத்த முள்ள 1135 பணியிடங்களில் 500 இடங்கள் காலியாக உள்ளது. சீனியர் அக்கவுன்ட் ஆபீசர் 42ல், 3 பேர் தான் உள்ளனர். இதனால் பல பணிகள் முடங்கி கிடக்கிறது.67ம் ஆண்டு சட்டத்தை காட்டி, 62 பணியிடங்களுக்கு மேல் போட மாட்டேன் என கூறிய தலைமை செயலர், 14 பணியிடங்கள் உள்ள ஐ.ஏ.எஸ்., இடத்தில் 24 பேரை எப்படி உள்ளே விட்டார்.டில்லியில் ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எல்லாம் இங்கே அனுப்ப, புதுச்சேரி என்ன சரணாலயமா.புதுச்சேரியில் அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. முதல்வரே, சாட்டையை எடுங்கள், நிர்வாகத்தை சீர்படுத்துங்கள். காரைக்காலில் கலெக்டருக்கு எந்த பவரும் இல்லை எல்லா பைல்களும் பதுச்சேரிக்கு வந்து தேங்கி நிற்கிறது. பகல் கொள்ளை போல் குப்பை வரி, சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி விட்டீர்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X