நகராட்சி இடுகாட்டில் குப்பை கொட்டும் அவலம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் நகராட்சி இடுகாட்டில், குப்பைகளைக் கொட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டிவனம் சலவாதி சாலையில் நகராட்சி எரிவாயு தகன மேடையும் அருகிலேயே இறந்தவர்களை புதைக்கும் இடுகாடும் அமைந்துள்ளது. எரிவாயு தகன மேடை அமைந்துள்ள பகுதி பூங்கா போல் அமைக்கப்பட்டு துாய்மையாக பராமரிக்கப்படுகிறது.இடுகாடு

திண்டிவனம்-திண்டிவனம் நகராட்சி இடுகாட்டில், குப்பைகளைக் கொட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டிவனம் சலவாதி சாலையில் நகராட்சி எரிவாயு தகன மேடையும் அருகிலேயே இறந்தவர்களை புதைக்கும் இடுகாடும் அமைந்துள்ளது. எரிவாயு தகன மேடை அமைந்துள்ள பகுதி பூங்கா போல் அமைக்கப்பட்டு துாய்மையாக பராமரிக்கப்படுகிறது.இடுகாடு பக்கத்தில், குப்பைகள் தரம் பிரிக்கும் யார்டு அமைந்துள்ளது. இந்த இடத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.மக்கும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தனியாக பிரித்து கொடுத்தால் மட்டுமே யார்டு உள்ளே கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது.ஆனால், நகராட்சி துப்புரவு ஊழியர்கள் நகர பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் பிரிக்காத குப்பைகளை இடுகாட்டில் மலைபோல் கொட்டி குவிக்கின்றனர்.இதனால் இடுகாட்டிலுள்ள காலி இடங்கள் குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், உடல்களை புதைக்க இடம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.பொது மக்கள் நலன் கருதி நகராட்சி இடுகாட்டில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X