தமிழ்நாடு

சீரமைக்கப்படுமா? ; சேதமாகும் வராகநதி வாய்க்கால்...ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
செஞ்சி-வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வராகநதி வாய்க்கால் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி சேதமாகி வருகிறது. இதனால், ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் ஆற்று பாசனம் ஏதும் இல்லை. ஆனால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும், ஏரிகளுக்கு தண்ணீர்
 சீரமைக்கப்படுமா? ; சேதமாகும் வராகநதி வாய்க்கால்...ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல்

செஞ்சி-வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வராகநதி வாய்க்கால் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி சேதமாகி வருகிறது.

இதனால், ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் ஆற்று பாசனம் ஏதும் இல்லை. ஆனால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும், ஏரிகளுக்கு தண்ணீர் வருவதற்கும் முக்கிய நீர் ஆதாரமாக வராக நதி உள்ளது. செஞ்சியைச் சுற்றியுள்ள மலை, காடுகளில் இருந்து வரும் மழைநீர் வராக நதி வழியாக செஞ்சி பகுதியை செழிப்படையச் செய்து வருகிறது.

வராகநதியின் குறுக்கே செவலபுரையில் கட்டியுள்ள தடுப்பணையில் இருந்து வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த செல்லபிராட்டி, மேல்களவாய், ஆனத்துார் உள்ளிட்ட 17 ஏரிகளுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.அணை உள்ள இடத்தில் இருந்து ஏரிகள் உள்ள பகுதி புவியியல் ரீதியாக மிக குறைந்த அளவிலேயே தாழ்வாக உள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் வேகமாகச் செல்லாமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது. இதனால் திட்டம் செயலிழந்து போனது.எனவே, தடையின்றி தண்ணீர் செல்ல வசதியாக கடந்த 2015-2016ம் நிதி ஆண்டில் அணை பகுதியை செப்பனிட்டு, புதிதாக சிமென்ட் வாய்க்கால் அமைக்க பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவு மூலம் 9 கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு பணிகள் முடிவடைந்தன.

அப்போது குறைந்த அளவிலேயே மழை பெய்தது. இருந்த போதும் புதிய வாய்க்கால் வழியாக வராகநதி தண்ணீர் வல்லம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளைச் சென்றடைந்தது.இதன் பிறகு கடந்த 3 ஆண்டாக செஞ்சி பகுதியில் கன மழை பெய்து வராகநதியில் எப்போதும் இல்லாத வகையில் தண்ணீர் வந்தது. செவலபுரை தடுப்பணை வழியாக வல்லம் ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றது. அத்துடன் வராகநதி இணையும் சங்கராபரணி ஆற்றில் செஞ்சியில் தரைப்பாலத்தின் மீது பல மாதங்களாக தண்ணீர் செல்கிறது.ஆனாலும் இந்த ஆண்டு வல்லம் ஒன்றிய ஏரிகளுக்கு இதுவரை வராக நதி வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்லவில்லை.செவலபுரை அணையில் இருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் வாய்க்கால்களை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் கரை மீதிருந்த மண் மேடுகள் கரைந்து வாய்க்காலில் மண் குவிந்தன. அத்துடன் ஏராளமான மரம், செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி சிமென்ட் கட்டுமானமும் சேதமாகி வருகிறது.

இதனால் இந்த ஆண்டு அணை நிரம்பினாலும் வாய்க்காலில் தண்ணீர் செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழைக்குள் இந்த வாய்க்காலின் உள்ளே உள்ள மண் திட்டுகளை அகற்றுவதுடன், கரை மீதும், வாய்க்கால் உள்ளேயும் மண்டியுள்ள புதர்களை அகற்றவும் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X