கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு விசாரணை: அக்.1க்கு ஒத்திவைப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு வழக்கில், புலன் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். ஜாமினில் உள்ள
 கோடநாடு வழக்கு விசாரணை: அக்.1க்கு ஒத்திவைப்பு

ஊட்டி:கோடநாடு வழக்கில், புலன் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணை அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். ஜாமினில் உள்ள மற்ற, எட்டு பேர் ஆஜராகவில்லை.விசாரணை துவங்கியதும், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர், 'கோடநாடு வழக்கில் மேல் புலன் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், கூடுதல் அவகாசம் வேண்டும்' என, தெரிவித்து, மனு தாக்கல் செய்தனர்.

மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. விசாரணை அக்., 1க்கு ஒத்தி வைக்கப்பட்டது.அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் கூறியதாவது:அரசு தரப்பில் இவ்வழக்கில், மேல் புலன் விசாரணையும் தேவைப்படுவதால் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று நீதிபதி சஞ்சய் பாபா அனுமதியளித்தார். ஒரு காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு காவலாளி தாக்கப்பட்டுள்ளார். ஒருவர் சந்தேக மரணமடைந்துள்ளார்.

ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது.சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதால், மேல் புலன் விசாரணை தேவைப்படுகிறது. தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இவ்வழக்கு தொடர்பாக முழு விவரங்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்பது அரசின் நோக்கம்.இவ்வாறு, அவர் கூறினார்.


சயானுக்கு போலீஸ் பாதுகாப்பு

எதிர்தரப்பு வக்கீல்களில் ஒருவரான விஜயன் கூறுகையில்,''சயானுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வக்கீல் இல்லாமல் இருந்த வாளையார் மனோஜுக்கு, இலவச சட்ட உதவி மையத்தால் வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளார். கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சஜீவன் உட்பட, ஒன்பது பேரை விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என நீதிபதியிடம் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X