பொது செய்தி

தமிழ்நாடு

கால் பந்து போட்டி பரிசளிப்பு விழா

Added : செப் 03, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில் நடந்த கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம், கால் பந்தாட்டக் கழகம் சார்பில் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. 12 அணிகள் பங்கேற்றன. லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் போட்டியை துவக்கி வைத்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலை பரிசு வழங்கும்

திண்டிவனம்-திண்டிவனத்தில் நடந்த கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம், கால் பந்தாட்டக் கழகம் சார்பில் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. 12 அணிகள் பங்கேற்றன. லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் போட்டியை துவக்கி வைத்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலை பரிசு வழங்கும் விழா நடந்தது. போட்டியில் எண்டியூர், திண்டிவனம் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது. இவர்களுக்கு முறையே 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய் பரிசு மற்றும் கோப்பையை லயன்ஸ் சங்க மாவட்ட ஆலோசகர் சுபாஷ் வழங்கினார்.விழாவில், நண்பர்கள் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன் ரமேஷ், காமராஜர், துரை, வெங்கடேசன், சைமன் துரைசிங், சதாசிவம், திண்டிவனம் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் அருண்விஜி, பொருளாளர் வைத்தியநாதன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X