கிரைம் செய்திகள்...

Added : செப் 03, 2021
Share
Advertisement
மகள் மாயம்: தந்தை புகார்திருவெண்ணெய்நல்லுார்: சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் அமுதா, 21; பி.காம்., பட்டதாரி. இவர், விழுப்புரத்தில், நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தியவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்:

மகள் மாயம்: தந்தை புகார்திருவெண்ணெய்நல்லுார்: சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் அமுதா, 21; பி.காம்., பட்டதாரி. இவர், விழுப்புரத்தில், நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தியவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: டி.புதுப்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த மணி, 26; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.முன்விரோதம்: மூவர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: துலங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 26; ஆமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 25; இருவருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 30ம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தனது நண்பர்களுடன் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின்பேரில் குமரேசன், கார்த்திகேயன், அரவிந்த் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சூதாடிய 6 பேர் கைதுகச்சிராயபாளையம்: சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் குதிரைச்சந்தல் கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது, மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அருள், 30; பாலு, 29; கோவிந்தராஜ், 29; கோவிந்தசாமி, 27; மணி, 30; அலக்ஸ், 27; ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 5,000 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கஞ்சா விற்ற ஐவர் கைதுவிழுப்புரம்: வடக்கு ரயில்வே காலனியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன், 21; அப்துல் மதீன், 22; அப்துல் முனின், 20; சென்னை நெடுஞ்சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன், 20; விக்கிரவாண்டி அருள், 20; ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.இளம்பெண் தற்கொலைவானுார்: தி.கூட்ரோடு, ஜவகர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சித்ரா, 27; இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சித்ராவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த மாதம் 25ம் தேதி இரவு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், மனமுடைந்த சித்ரா எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.சாராயம் பதுக்கிய இருவருக்கு வலைமரக்காணம்: கோட்டக்குப்பம் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், கரிப்பாளையம் முந்திரிதோப்பில் சோதனை நடத்தினர். அப்போது 22 கேன்களில் 750 லிட்டர் சாராயத்தை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த லோகு மகன்கள் ஞானவேல், 27; விஜயகுமார், 23; ஆகியோர் பதுக்கி வைத்தது தெரியவந்தது. வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.கோழிகள் இறப்பு: போலீஸ் விசாரணைஅவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 23; இவர், துறிஞ்சிப்பூண்டியில் நாட்டு கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று காலை பண்ணையில் பார்த்தபோது, 35 நாட்டு கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது குறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பல்பு திருடிய ஆசாமி கைதுஉளுந்துார்பேட்டை: இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விருத்தாசலம் சாலையில் சந்தேகப்படும்படி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த நசீர் மகன் ரகமத்துல்லா, 21; எனவும், உளுந்துார்பேட்டை பகுதிகளில் பேக்கரி உள்ளிட்ட கடைகளில் உள்ள எல்.இ.டி., பல்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.மகள் மாயம்: தந்தை புகார்திருக்கோவிலுார்: நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவரது 17 வயது மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நடேசன் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X