பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணமில்லா குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணமில்லா குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.மாணவர்கள தகுதிக்கேற்ப தங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள www.training.tahdco.com இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு போக்குவரத்து படிகள் மற்றும் பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்படும்.சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கிடவும் ஆவண செய்யப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X