பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை,-உளுந்துார்பேட்டையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக குழந்தைகள் நலன் பாதுகாப்பு கமிட்டி அமைத்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த போலீசாருக்கு

உளுந்துார்பேட்டை,-உளுந்துார்பேட்டையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக குழந்தைகள் நலன் பாதுகாப்பு கமிட்டி அமைத்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த போலீசாருக்கு எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில் உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஏட்டு அஷ்டலட்சுமி தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளிடையே குழந்தை திருமணம், சிறுமிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார். மேலும், அவசியமின்றி மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார். போலீசார் மாலா, சுகுணா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X