பொது செய்தி

தமிழ்நாடு

திருநாவலுார் பள்ளியில் சி.இ.ஓ., - டி.இ.ஓ., ஆய்வு

Added : செப் 03, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-திருநாவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., டி.இ.ஓ., ஆய்வு செய்தனர்.கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கியது. திருநாவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என சி.இ.ஓ., விஜயலட்சுமி நேற்று நேரில் ஆய்வு

உளுந்துார்பேட்டை-திருநாவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., டி.இ.ஓ., ஆய்வு செய்தனர்.கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கியது. திருநாவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என சி.இ.ஓ., விஜயலட்சுமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும், முகக் கவசம் அணிந்து வருவதன் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் சமையலறை பகுதிகளை ஆய்வு செய்தார்.டி.இ.ஓ.. மணிமொழி, தலைமையாசிரியை இளங்கோதை, உதவி தலைமையாசிரியர்கள் அருள்மணி, சத்யமூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜசேகரன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், உடற்கல்வி ஆசிரியர் அன்புச் சோழன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X