பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்டுகிறது: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே...ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 'கவனிப்பு' துவங்கியது

Added : செப் 03, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர், கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிட தயாராகும் வேட்பாளர்கள், தங்களது ஆதரவாளர்களை தினமும் கவனித்து வருவதால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களைகட்டத் துவங்கி விட்டது.விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் இருந்தன. இங்கு 384 கிராம வார்டு

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவர், கிராம வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிட தயாராகும் வேட்பாளர்கள், தங்களது ஆதரவாளர்களை தினமும் கவனித்து வருவதால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களைகட்டத் துவங்கி விட்டது.

விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் இருந்தன. இங்கு 384 கிராம வார்டு உறுப்பினர்கள், 53 ஊராட்சித் தலைவர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வரையறைக்குப்பின், முகையூர் ஒன்றியத்தில் இருந்த 7 ஊராட்சிகள் ரிஷிவந்தியம் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதால், 60 ஊராட்சிகளாக உயர்ந்தது.ஒன்றியத்தில் தற்போது, 444 கிராம வார்டு உறுப்பினர்கள், 60 ஊராட்சித் தலைவர்கள், 25 ஒன்றிய கவுன்சிலர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்கள் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 67 ஆயிரத்து 472 ஆண், 62 ஆயிரத்து 201 பெண், 30 மூன்றாம் பாலினம் என மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 703 வாக்காளர்கள் உள்ளனர். 258 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இன்னும் சில தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் துவங்கும் என கூறப்படுவதால், போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் பகுதி வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் வகையில் களப்பணியாற்ற துவங்கி விட்டனர்.தேர்தலுக்கான இடஒதுக்கீடு விபரம் இன்னும் வெளியாகவில்லை. ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிட சுயேச்சை வேட்பாளர்களை விட, கட்சி சார்ந்த நபர்களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. இதனால் பழைய இட ஒதுக்கீடு மூலம், வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இதில், கிராம வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கு வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிடலாம். எனவே, இந்த 2 பதவியிடங்களுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஆதரவாளர்களை செழிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர்.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தற்போது கவுரவ பிரச்னையாக உள்ளது. இதனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என வேட்பாளர்களாக களம் காண இருப்பவர்கள் பணத்தை செலவு செய்ய துவங்கியுள்ளனர்.அதாவது, தங்களது ஆதரவாளர்கள், நெருங்கியவர்களை எதிர் தரப்புக்கு செல்லாமல் இருப்பதற்காக, தினமும் சைவ, அசைவ விருந்து, மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். இதுதவிர, மக்களிடையே நல்ல மதிப்பைப் பெறுவதற்காக அப்பகுதியில் நிலவும் குடிநீர், சாலை, தெரு மின்விளக்கு போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கின்றனர்.குறிப்பாக, இளைஞர்களின் ஓட்டுகளைக் கவர, விளையாட்டுப் போட்டி நடத்த நிதி அளித்து, இளம் வாக்காளர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

இதுதவிர, கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்துவதாக உறுதியளித்தல், மக்களை ஒன்றாக திரட்டி ஆதரவு கோருதல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களால் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே களைகட்டத் துவங்கி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X