தமிழ்நாடு

அபாயம்:காப்புக்காட்டில் வன விலங்குகள் உயிரிழக்கும்...எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை தேவை

Added : செப் 03, 2021
Share
Advertisement
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சாலையின் இருபுறம், அரசு காப்புக்காடு உள்ளது. இந்த வழியாக அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன.மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள், தேசிய பறவையான மயில்களும் வசிக்கின்றன. சாலையின் இருபுறமும் நுாற்றுக்கணக்கில் குரங்குகள் உணவுக்கு காத்திருப்பதால், பயணிகள், வாகன ஓட்டிகள் பொறி கடலை, வாழைப்பழம், பிரட், பிஸ்கட், தண்ணீர்
 அபாயம்:காப்புக்காட்டில் வன விலங்குகள் உயிரிழக்கும்...எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சாலையின் இருபுறம், அரசு காப்புக்காடு உள்ளது. இந்த வழியாக அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன.மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள், தேசிய பறவையான மயில்களும் வசிக்கின்றன.

சாலையின் இருபுறமும் நுாற்றுக்கணக்கில் குரங்குகள் உணவுக்கு காத்திருப்பதால், பயணிகள், வாகன ஓட்டிகள் பொறி கடலை, வாழைப்பழம், பிரட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். காப்புக் காட்டில் உணவிற்கு வழியில்லாத குரங்குகள், சாலையில் சிதறி கிடக்கும் உணவுகளை சாப்பிடும் போது வாகனங்களில் சிக்கி அடிபட்டு பலியாவதும் தொடர்கிறது.

இந்நிலையில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அழுகிய பழங்கள், வீணான உணவுப் பொருட்கள், கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகளை காப்புக்காட்டின் சாலையோர பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனால் கருவேப்பிலங்குறிச்சி சாலையின் இருபுறமும் கழிவுகள் குவிந்துள்ளன.இவற்றை சாப்பிடும் குரங்குகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு விரைவில் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.சில குரங்குகள் வழக்கத்திற்கு மாறாக நிறம் மாறியும், ரோமங்கள் உதிர்ந்த நிலையில், உடலில் காயங்கள் உட்பட பல்வேறு உபாதைகளுடன் சுற்றித் திரிவது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

மேலும் குடியிருப்புகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வோர் இரவு நேரங்களில், காப்புக்காடு வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து விலங்குகள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி அரசு காப்புக்காடு பகுதியில் கழிவுகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். பாதுகாப்பு கருதி வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விலங்குகள் தஞ்சம்கருவேப்பிலங்குறிச்சி அரசு காப்புக்காட்டில் வசிக்கும் மான்கள், குரங்குகள், தேசிய பறவையான மயில் ஆகியவை உள்ளன. இவற்றிற்கு உணவு, குடிநீர் பற்றாக்குறையாக உள்ளதால் உணவு, குடிநீர் தேடி ஆலிச்சிகுடி, இளமங்கலம், பேரளையூர், நேமம் மற்றும் விருத்தாசலம் நகர பகுதிகளில் தஞ்சமடைகின்றன.

இதனால் நாய்களிடம் மான்கள் சிக்கி காயமடைகின்றன. காப்புக்காட்டில் விலங்குகளுக்கு உணவு, குடிநீர் வசதி செய்து தர வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக விரோதிகள் உலாஅதிக முட்புதர் நிறைந்த காப்புக்காட்டில் வாகனங்கள் சென்று வர வழி உள்ளது. இதனால் காட்டினுள் செல்லும் சமூக விரோதிகள் மது அருந்துதல், குற்றச் செயல்களுக்கு கூட்டு சதித் திட்டம் தீட்டுதல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் பொது மக்கள் சென்றுவர தடை உள்ள நிலையில், சமூக விரோதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவில்லை. இதனால், மயில்கள், மான்கள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X