கிரைம் செய்திகள் | Dinamalar

கிரைம் செய்திகள்

Added : செப் 03, 2021
Share
கஞ்சா விற்றவர் கைதுபண்ருட்டி: பண்ருட்டி சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் ரோந்து சென்றனர். சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கபாலி மகன் அருண்,20; என்பவரை கைது செய்து 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர்.இறந்து மிதந்த முதியவர் சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ரயில்வே

கஞ்சா விற்றவர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் ரோந்து சென்றனர். சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கபாலி மகன் அருண்,20; என்பவரை கைது செய்து 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர்.இறந்து மிதந்த முதியவர்

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ரயில்வே டிராக் அருகிலிருந்து 150 மீட்டர் துாரத்தில் கொள்ளிடம் ஆற்றில் இறந்த நிலையில் உடல் நேற்று மிதந்தது. தகவலறிந்த அண்ணாமலை நகர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சென்று சுமார் 60 வயதுள்ள முதியவர் பிரேதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். ஆட்டோ கண்ணாடி உடைப்பு

வடலுார் : விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் சரவணன், 22; நேற்று முன்தினம் தனது ஆட்டோவில் நண்பர் செந்தமிழ்ச்செல்வன், 25; என்பவருடன் வடலுார் வழியாக சேத்தியாத்தோப்பு சென்றார். வடலுார் நான்கு முனை சந்திப்பு சாலையில் ஆட்டோ நின்ற போது வடலுார் ஆ.சி., காலனியை சேர்ந்த சத்தியசீலன் ஓட்டி வந்த பைக் மோதியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியசீலன், அவரது நண்பர் சேர்ந்து வடலுார் சர்ச் அருகே ஆட்டோவை மறித்து கண்ணாடியை உடைத்து இருவரையும் தாக்கினர். இதில் சரவணன், நண்பர் செந்தமிழ் செல்வன் காயமடைந்து மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து சத்தியசீலன், 22; என்பவரை கைது செய்து அவரது நண்பரை தேடி வருகின்றனர்.மின்னல் தாக்கி விவசாயி பலி புவனகிரி: புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த அம்பாள்புரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன்,30; நேற்று மாலை பிரசன்னாரமாபுரத்தில் உள்ள வயலில் வேலையாக இருந்தார். அப்போது மழை பெய்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார். கலைச்செல்வனுக்கு இலக்கியா என்ற மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆண் சடலங்கள் குறித்து விசாரணை

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பொன்னேரி புறவழிச் சாலையில், 50 வயதுள்ள ஆண் சடலம் கிடந்தது. வி.ஏ.ஓ., மணிகண்டன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் ரயில்வே காலனியில் 65 வயதுள்ள ஆண் சடலம் கிடந்தது. சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மனைவியை தாக்கியவர் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் தில்லை நகரைச் சேர்ந்தவர் தீபக்,27; இவரது மனைவி பிரியங்கா, 23; மனைவியின் நடத்தையில் தீபக் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தினார். மனமுடைந்த பிரியங்கா அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் அங்கு சென்ற தீபக், பிரியங்காவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், தீபக் விருத்தாசலம் போலீசார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மணல் கடத்திய 2 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று கச்சிபெருமாநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல், 53; செல்லமுத்து, 67; ஆகியோரை கைது செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.தந்தையை வெட்டிய மகன் கைது

வடலுார்: வடலுார் அருகே காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 44; விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். ஆத்திரமடைந்த அவரது மகன் புருஷோத்தமன், சக்திவேல் மனைவி புவனேஸ்வரி சேர்ந்து அருவாள் மனையால் வெட்டியதில் காயமடைந்து வடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வடலூர் போலீசார் வழக்கு பதிந்து, புருஷோத்தமனை 20; கைது செய்து, புவனேஸ்வரி தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X