ஆம்புலன்ஸ்  சேவை துவக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ்  சேவை துவக்கி வைப்பு

Added : செப் 03, 2021
Share
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில், ரூ. 8 லட்சம் மதிப்பில், வாங்கிய ஆம்புலன்ஸை சப் கலெக்டர் மதுபாலன் துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பில், புதியதாக ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. அதன் சேவை துவக்க விழா நேற்று மீராப் பள்ளியில் நடந்தது. இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில், ரூ. 8 லட்சம் மதிப்பில், வாங்கிய ஆம்புலன்ஸை சப் கலெக்டர் மதுபாலன் துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பில், புதியதாக ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது. அதன் சேவை துவக்க விழா நேற்று மீராப் பள்ளியில் நடந்தது. இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். புதிய ஆம்புலன்சை, சப் கலெக்டர் மதுபாலன் கொடிசைத்து, துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர், ஏ.எல்.சி., சமுதாயக் கல்லுாரி நிர்வாகி பஷீருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X