சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் ஊர்வலத்திற்கு அருள்புரிய கடவுளிடம் முறையிடும் போராட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அருள் புரிய வேண்டி , கடலுாரில் இந்து முன்னணி சார்பில், கடவுளிடம் முறையிடும் நுாதன போராட்டம் நடத்தப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்த அரசு தடை செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்தது இந்துக்களுக்கு எதிரானது. அரசின் அறிவிப்பை திரும்ப பெற்று,

கடலுார்-விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அருள் புரிய வேண்டி , கடலுாரில் இந்து முன்னணி சார்பில், கடவுளிடம் முறையிடும் நுாதன போராட்டம் நடத்தப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்த அரசு தடை செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்தது இந்துக்களுக்கு எதிரானது. அரசின் அறிவிப்பை திரும்ப பெற்று, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி, கோவில்களில் கடவுளிடம் முறையிடும் போராட்டம் நேற்று இந்து முன்னனி சார்பில் நடத்தப்பட்டது.கடலுார் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் விநாயகர் சன்னதியில், கடலுார் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த ஆட்சியாளர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி விழா நடக்க அருள் புரிய முறையிட்டனர்.நிர்வாகிகள் மணிகண்டன், சதீஷ், மதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பண்ருட்டியில் இந்து முன்னணி சார்பில் காந்தி ரோட்டில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் முன்பு பிரார்த்தனை போராட்டம் நடந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் வெங்கடேசன், ரவிச்சந்திரன், கார்த்திக், சுரேஷ், வினோத்குமார், ராஜேந்திரன், நாராயணன், சேகர், சக்திவேல், தேவா உட்பட பலர் பங்கேற்றனர். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மங்களூர் ஒன்றிய பொருளாளர் பிச்சைப் பிள்ளை, பா.ஜ., மாவட்டநிர்வாகி சேனாதிபதி உட்பட பலர் சுவாமியிடம் மனுவை வைத்து பிரார்த்தனை செய்தனர். தொழுதுார் மதுராந்தக சோழீஸ்வரர் சன்னதியில் மனுவை வைத்து பிரார்த்தனை செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், இந்து முன்னணி மாநில துணைச் செயலர் கதிரவன் தலைமையில் விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு நேற்று கோரிக்கை மனு அளித்தனர். மனுவை விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள காணிக்கை உண்டியலில் செலுத்தினர். பரங்கிப்பேட்டை நகர இந்து முன்னணி சார்பில் ஆதிமூலேஸ்வரர் கோவில், குமரக்கோவில் உள்ளிட்ட கோவில்களில், மாவட்ட செயலர் ராஜன் தலைமையில், ஒன்றிய தலைவர் செல்வநாதன், ஒன்றிய பொதுச்செயலர் மாணிக்கம், சரவணன், பாரதிமோகன் ஆகியோர் முறையிடும் போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X