பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி பணியை துரிதப்படுத்த கலெக்டர் ஆலோசனை

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கடலுார் மாவட்டத்தில் 40.6

கடலுார்-கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளை கலெக்டர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், கடலுார் மாவட்டத்தில் 40.6 சதவீதம் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். வருவாய்த்துறை மூலம் தாசில்தார்கள் கொரோனா தடுப்பூசி நடக்குமிடங்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்த வி.ஏ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கிராம உதவியாளர்கள் தண்டோரா மூலம் தடுப்பூசி செலுத்த உள்ளதை விளம்பரம் செய்ய வேண்டும், கிராம பஞ்சாயத்து செயலர்கள் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவித்தார். கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சிங், பவன்குமார் ஜி கிரியப்பனவர், இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குன் மீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X