பொது செய்தி

தமிழ்நாடு

20 டன் நெல் விதைகள் விற்க தடை வேளாண் அதிகாரி நடவடிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் குறைபாடு உள்ள 20 டன் நெல் விதைகளை கண்டறிந்து விற்க தடை செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளான கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் வட்டார விவசாயிகள் தற்போது சம்பா பட்ட சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் குறைபாடு உள்ள 20 டன் நெல் விதைகளை கண்டறிந்து விற்க தடை செய்யப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளான கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் வட்டார விவசாயிகள் தற்போது சம்பா பட்ட சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்துள்ள நெல் ரகங்களை கடலுார் விதை ஆய்வாளர் தமிழ்வேல் ஆய்வு செய்தார்.அப்போது, விதை விற்பனை நிலையங்களில் 376 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தரப் பகுப்பாய்விற்கு கடலுார் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாதது, நமது பகுதிக்கு பரிந்துரைக்காதது என, ரூ. 6.97 லட்சம் மதிப்பில் 19.5 டன் விதைகள் குறைபாடு உள்ளதாக கண்டறிந்து, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ற பரிந்துரைத்த நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். வெளி ஆட்களிடம் விதைகளை வாங்கி ஏமாற வேண்டாம். உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகள் வாங்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டத்தின்படியும், விதை கட்டுப்பாடு ஆணைபடியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலுார், விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X