பொது செய்தி

இந்தியா

60 சதவீதம் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில் நேரடி வகுப்புகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கியும், 60 சதவீதம் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் தான் தொடர்வதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, நேரடி வகுப்புகள் துவங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன் அனுமதி வழங்கிவிட்டது.ஆனால், சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடர்ந்து நடக்கிறது.

பெங்களூரு-கர்நாடகாவில் நேரடி வகுப்புகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கியும், 60 சதவீதம் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் தான் தொடர்வதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, நேரடி வகுப்புகள் துவங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன் அனுமதி வழங்கிவிட்டது.ஆனால், சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடர்ந்து நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில், பெங்களூரு தெற்கு பகுதியில் 62 சதவீதம்; பெங்களூரு வடக்கில் 63; கலபுரகியில் 50; யாத்கிரியில் 43; ராய்ச்சூரில் 43 சதவீதம் பள்ளிகள் திறக்கப்படவில்லை.பெரும்பான்மையான பள்ளிகள் திறக்கப்பட்டதை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்வில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை, 34 சதவீதம் பள்ளிகள் தான் மாணவர்கள் திறன்மேம்பாட்டு கண்காணிப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.பள்ளிக்கல்வி துறை கமிஷனர் அன்புகுமார் கூறியதாவது:இணையதளத்தில் தான் பள்ளிகள் பதிவிடாமல் உள்ளன. ஆனால், பள்ளிகளில் நேரடி வகுப்பு வரும் மாணவர்களின் வருகை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகமாக உள்ளது. சில தனியார் பள்ளிகளில் தான், பெற்றோர் மாணவர்களை அனுப்ப தயங்குகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.தனியார் பள்ளி சங்கத்தினர் கூறியதாவது:பல பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தான் பள்ளிக்கு வருவதில்லை.மாணவர்கள் குறைவாக இருப்பதால், சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளையே தொடர்ந்து நடத்துகின்றனர். 1,000 மாணவர்கள் வர வேண்டிய வகுப்புகளில் 50 மாணவர்கள் தான் இருக்கின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்புகளையே தொடர்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X