பொது செய்தி

இந்தியா

இரண்டு தவணை, கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முக கவசம் அணிவது கட்டாயம்.

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு-''பொது மக்கள் இரண்டு தவணை, கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முக கவசம் அணிவது கட்டாயம். இல்லையென்றால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா எச்சரித்தார்.பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் தடுப்பூசி செலுத்தும் அளவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 24 மணி நேரத்தில்

பெங்களூரு-''பொது மக்கள் இரண்டு தவணை, கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முக கவசம் அணிவது கட்டாயம். இல்லையென்றால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா எச்சரித்தார்.பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் தடுப்பூசி செலுத்தும் அளவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 24 மணி நேரத்தில் பெங்களூரில், 1.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி, சாதனை செய்யப்பட்டுள்ளது. அதே போன்று தினமும், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8:00 மணி முதல், தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். மாலையிலும் செயல்படும். குடிசைப்பகுதிகள், பிற்படுத்தப்பட்ட பகுதிகளில், மிக அதிக அளவில் தடுப்பூசி போடப்படும். வீடு வீடாக சென்று தடுப்பூசி போடவும் ஆலோசிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X