பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று, மொத்த உலகுக்கும் சிறப்பான பாடம் கற்றுக்கொடுத்துள்ளது

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு -''கொரோனா தொற்று, மொத்த உலகுக்கும் புதிய சவாலை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலை வரும் என, யாரும் கனவிலும் நினைக்கவில்லை. கொரோனா நமக்கு சிறப்பான பாடம் கற்றுக்கொடுத்துள்ளது,'' என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார். கொரோனா நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய 100 க்கும் மேற்பட்ட டாக்டர்களை அமைச்சர் அசோக் நேற்று கவுரவித்தார். பின் அவர்

பெங்களூரு -''கொரோனா தொற்று, மொத்த உலகுக்கும் புதிய சவாலை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலை வரும் என, யாரும் கனவிலும் நினைக்கவில்லை. கொரோனா நமக்கு சிறப்பான பாடம் கற்றுக்கொடுத்துள்ளது,'' என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார். கொரோனா நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய 100 க்கும் மேற்பட்ட டாக்டர்களை அமைச்சர் அசோக் நேற்று கவுரவித்தார். பின் அவர் பேசியதாவது:கொரோனா தொற்று முழு உலகுக்கும் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக, தொற்று மக்களுக்கு கொடுக்கும் தொந்தரவு கொஞ்சம், நஞ்சமல்ல.பொருளாதாரம், உடல் மற்றும் மன ரீதியில், மக்களை நெருக்கடியில் தள்ளியது. இது போன்ற கஷ்டமான சூழ்நிலை ஏற்படும் என கனவிலும் ஊகிக்கவில்லை. கொரோனா அனைத்தையும் மாற்றியுள்ளது.தொற்றின் தீவிரத்தை நினைத்தால் ஆம்புலன்ஸ் சத்தம்; உடல்களை எரிக்கும் காட்சிகள் கண் முன் தோன்றுகிறது. தொற்று சிறப்பான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. நீண்ட வரிசையில் நிற்பதை, வாழ்க்கை பற்றிய ஒழுங்கை, கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்தது. பதற்ற நிலையில், மக்கள் அவரவர் வீட்டிலிருந்து, வெளியே வர தயங்கிய போது, டாக்டர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்.அன்று நமக்கிருந்த ஒரே நம்பிக்கை, டாக்டர்கள் தான். அவர்களுக்கு நிறைந்த மனதுடன், நன்றி கூற வேண்டும். அதே போல, துப்புரவு தொழிலாளர்களுக்கும், நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால் கொரோனாவின் போது, நகரை சுத்தமாக வைத்திருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X