போலி ஜாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போலி ஜாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்

Added : செப் 03, 2021
Share
பெங்களூரு-போலி ஜாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு போலியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவாக ஜாதி சான்றிதழ் பெற்றவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.இதுகுறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில்

பெங்களூரு-போலி ஜாதி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீதும் குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு போலியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவாக ஜாதி சான்றிதழ் பெற்றவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.இதுகுறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலி ஜாதி சான்றிதழ் வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.அவர் கூறியதாவது:போலி ஜாதி சான்றிதழ் பெற்ற பயணியர் மட்டுமின்றி, அதை பரிசோதித்த மாவட்ட குழு அதிகாரிகள், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி ஜாதி சான்றிதழ் வழங்கியதில் தொடர்புடைய அதிகாரிகளின் மீதும் விசாரணை நடத்தப்பட்டு குற்றவழக்குப்பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X