பொது செய்தி

இந்தியா

'அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே, மாநில, மத்திய பா.ஜ., அரசுகள், மக்களுக்கு அளித்த பங்களிப்பு,

Added : செப் 03, 2021
Share
Advertisement
ராம்நகர்-''அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே, மாநில, மத்திய பா.ஜ., அரசுகள், மக்களுக்கு அளித்த பங்களிப்பு,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். ராம்நகர், சென்னப்பட்டணாவில், அவர் நேற்று கூறியதாவது:மத்திய, மாநில பா.ஜ., அரசுகள், ஏழை மக்களின் மீது விலை உயர்வு சுமையை ஏற்றி வைத்துள்ளன. ஒரு கூலித்தொழிலாளி கூட ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை

ராம்நகர்-''அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே, மாநில, மத்திய பா.ஜ., அரசுகள், மக்களுக்கு அளித்த பங்களிப்பு,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். ராம்நகர், சென்னப்பட்டணாவில், அவர் நேற்று கூறியதாவது:மத்திய, மாநில பா.ஜ., அரசுகள், ஏழை மக்களின் மீது விலை உயர்வு சுமையை ஏற்றி வைத்துள்ளன. ஒரு கூலித்தொழிலாளி கூட ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்துகிறார்.எரி பொருள் விலை உயர்வு தொடர்பாக, மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ., தலைவர்கள் வெறும் விளம்பரம் மூலம் திட்டங்களை பற்றி பிரசாரம் செய்த படி நிகழ்ச்சிகள் நடத்தியபடி காலம் கடத்துகின்றனர். எந்த திட்டமும் மக்களை சென்றடையவில்லை.இதுவரை மத்திய அரசு, மாநிலத்துக்கு நிதியுதவி வழங்கவில்லை. மத்திய அரசுக்கு, கர்நாடகா என்ற மாநிலம் உள்ளது என்பதே தெரியவில்லை. கர்நாடக வரைபடம் உள்ளதோ, அதையும் நீக்கிவிட்டனரா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X