பொது செய்தி

இந்தியா

சின்ன சின்னதாய்

Added : செப் 03, 2021
Share
Advertisement
டாக்டர் மீது தாக்குதல்!சீனிவாசப்பூர் அரசு மருத்துவமனை அறுவைச் சிகிச்சை பிரிவு மருத்துவர் ரங்கராவ், இரவு பணியை முடித்து கொண்டு நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, சீனிவாசப்பூரை சேர்ந்த கணேஷ், 26, மல்லேஸ், 27, ஆகிய இருவர். டாக்டர் ரங்கராவை வழி மறித்து தாக்கினர். இதில் டாக்டர் படுகாயமடைந்தார்.தகவலறிந்த தலைமை மருத்துவர் சீனிவாஸ், போலீஸ் நிலையத்தில் புகார்

டாக்டர் மீது தாக்குதல்!சீனிவாசப்பூர் அரசு மருத்துவமனை அறுவைச் சிகிச்சை பிரிவு மருத்துவர் ரங்கராவ், இரவு பணியை முடித்து கொண்டு நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, சீனிவாசப்பூரை சேர்ந்த கணேஷ், 26, மல்லேஸ், 27, ஆகிய இருவர். டாக்டர் ரங்கராவை வழி மறித்து தாக்கினர். இதில் டாக்டர் படுகாயமடைந்தார்.தகவலறிந்த தலைமை மருத்துவர் சீனிவாஸ், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.பயன் தரும் மருத்துவ திட்டம்''மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தை பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்று முல்பாகல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வர் வலியுறுத்தினார்.முல்பாகல் நீதிமன்றத்தில், ஆயுஷ்மான் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கி, விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகள், பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அத்திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களை சென்றடைவதில்லை. அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைந்தால் தான் அத்திட்டம் வெற்றிப் பெற்றதாக ஏற்க முடியும். மருத்துவ வசதிக்காக அரசின் காப்பீடு திட்டத்தையும் பயன் படுத்தி கொள்ள வேண்டும். ஏழைகள் நலனுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் அவசியம் தேவை.இவ்வாறு அவர் பேசினார்.கஞ்சா செடி அழிப்புபங்கார்பேட்டை பூதிக்கோட்டை அருகே பளமந்தி என்ற இடத்தில் தேவராஜ், 43., என்பவர் கஞ்சா செடி வளர்த்து வந்தார். கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். இரண்டு கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை அழித்தனர். இதன் மதிப்பு 85 ஆயிரம் ரூபாய் என தெரிவித்தனர். கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.காதல் திருமணம்!பேத்த மங்களா அருகிலுள்ள சிம்மலபண்டேஹள்ளி கிராமத்தை சேர்ந்த பாரத், 21, வெங்கடபுரா லட்சுமி, 19, ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம், மகளிர் நலத்துறை அலுவலகத்தில் அதிகாரி டாக்டர் கோபால், இரு குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் நேற்று நடத்தப்பட்டது.4 மாவட்டங்களுக்கு கிருஷ்ணா நதி நீர்''கோலார் மாவட்டத்தில் கே.சி., வேலி, எத்தினஹொளே திட்டத்துடன் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தையும் நிறைவேற்ற அரசு பரிசீலனையில் உள்ளது.'' என அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். கோலாரில் நேற்று அவர் கூறியதாவது: கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூர் ரூரல், ராம்நகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதுகுறித்து த்திய நீர்வளத்துறை அமைச்சரை முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த மாதம் 26 ல் சந்தித்த போது பேசினார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நான்கு மாவட்டங்களில் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X