பொது செய்தி

இந்தியா

மூன்று அரசியல் கட்சியினர் அருகருகே அமர்ந்திருந்தும், பேசி கொள்ளவில்லை.

Added : செப் 03, 2021
Share
Advertisement
ராம்நகர்-ராம்நகரை சேர்ந்த மூன்று அரசியல் கட்சியினர் அருகருகே அமர்ந்திருந்தும், பேசி கொள்ளவில்லை.ராம்நகர் மாவட்டம் என்றாலே முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு பெயர் பெற்றவை. விரோத அரசியல் செய்யும் தலைவர்கள் இருக்கும் மாவட்டம்.ராம்நகரை சேர்ந்த ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சகோதரர்கள் என மூன்று

ராம்நகர்-ராம்நகரை சேர்ந்த மூன்று அரசியல் கட்சியினர் அருகருகே அமர்ந்திருந்தும், பேசி கொள்ளவில்லை.ராம்நகர் மாவட்டம் என்றாலே முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு பெயர் பெற்றவை. விரோத அரசியல் செய்யும் தலைவர்கள் இருக்கும் மாவட்டம்.ராம்நகரை சேர்ந்த ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சகோதரர்கள் என மூன்று கட்சியினருமே பரம எதிரிகள்.ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்ப்பதே அரிது; குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் போது, சிவகுமார் அவருக்கு உறுதுணையாக இருந்தார். கூட்டணி முறிந்ததும் இருவரும் சந்திக்கவில்லை.இதற்கிடையில், மாவட்டத்தின் சென்னப்பட்டணாவில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று கவிஞர் சித்தலிங்கையா நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.இதில், குமாரசாமி, சிவகுமார் சகோதரரும், எம்.பி.,யுமான சுரேஷ், யோகேஸ்வர் ஆகிய மூன்று பரம அரசியல் விரோதிகளும், அருகருகே அமர்ந்திருந்தனர்.நிகழ்ச்சி முடியும் வரை ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்கவில்லை. மூன்று கட்சி தொண்டர்களுமே ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X