மனைவிக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என கணவரிடம் புகார்

Added : செப் 03, 2021
Share
Advertisement
மங்களூரு -மனைவிக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் தெரிவித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., யிடம், கணவர் புகார் அளித்த சம்பவம், மங்களூரில் நடந்துள்ளது. தட்சிண கன்னடா பெல்தங்கடி நெரியா கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிதானந்தா. இவரது மனைவி ராஜி. இவர் 11 ஆண்டுகளாக, துபாயில், பாகிஸ்தானுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு பயங்கரவாத அமைப்பினருடன்

மங்களூரு -மனைவிக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் தெரிவித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., யிடம், கணவர் புகார் அளித்த சம்பவம், மங்களூரில் நடந்துள்ளது. தட்சிண கன்னடா பெல்தங்கடி நெரியா கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிதானந்தா. இவரது மனைவி ராஜி. இவர் 11 ஆண்டுகளாக, துபாயில், பாகிஸ்தானுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பிருப்பதாக, கணவர் சந்தேக்கிறார். இது தொடர்பாக, தட்சிண கன்னட மாவட்ட போலீஸ் எஸ்.பி., ரிஷிகேஷ் சோனேவானேவிடம், விவசாயி சிதானந்தா அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:பணி நிமித்தமாக என் மனைவி ராஜி, துபாயில் பணியாற்றுகிறார். அவர் துபாய்க்கு செல்லும் போது, என் மகளுக்கு இரண்டு வயது; மகனுக்கு ஏழு மாதமாக இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை, வீட்டுக்கு வரும் மனைவி, அனைவருடனும் அன்யோன்யமாக இருந்தார். 2018ல் மனைவி இந்தியா வந்த போது, பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டனர். இனி துபாய்க்கு செல்லவேண்டாம் என, மனைவியிடம் கூறினேன். அதன்பின் அவரது நடவடிக்கையே மாறியது. என் பேச்சை மீறி துபாய் சென்றார். என்னுடன் சரியாக பேசுவதில்லை. ஆகஸ்ட் 10ல், மீண்டும் ஊருக்கு வந்த மனைவி, மகளை துபாய்க்கு அழைத்து செல்வதாக கூறுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், விவாகரத்து கேட்கிறார்.விவாகரத்து கொடுத்து, 'பிள்ளைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என, நெருக்கடி கொடுக்கிறார். ஓணம் பண்டிகையின் போது, நாங்கள் இந்து சம்பிரதாயப்படி, குங்குமம் வைக்க, பூச்சூட எதிர்ப்பு தெரிவித்தார். வீட்டில் எப்போதும் மொபைலில் பேசுகிறார். அழைப்பு வந்தால், எங்களை விட்டு தொலைவில் சென்று பேசுகிறார். சந்தேகமடைந்து அவரது துபாய் ஆவணங்களை, ஆய்வு செய்த போது, என்னிடம் பொய் சொன்னது தெரிந்தது. எங்களிடம் துபாயின் பி.ஆர்.ஷெட்டி நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறினார். ஆனால் ஆவணங்களில், அவர் பாகிஸ்தானுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது. இதுவரை சம்பாதித்த பணம், எங்கே என கேட்ட போது, கேரளாவை சேர்ந்த நபருக்கு கடன் கொடுத்திருப்பதாக கூறினார். அந்நபரை தொடர்பு கொண்டு பேசிய போது, 'உன் மனைவியை அழைத்து வந்து, கேரளாவில் விட்டு விட்டு, நீ வேறு திருமணம் செய்து கொள்' என, என்னை மிரட்டினார்.ஆகஸ்ட் 26ல் இரவு, நாங்கள் உறக்கத்தில் இருந்த போது, மனைவி வீட்டை விட்டு தப்பியோடினார். என் மனைவிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என, சந்தேகிக்கிறேன். என் மகளை மட்டும் துபாய்க்கு அழைத்து சென்று, பயங்கரவாத அமைப்பினருக்கு விற்க திட்டமிட்டிருக்கலாம்' என, அஞ்சுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X