கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி,'' ; அமித் ஷா

Added : செப் 03, 2021
Share
Advertisement
தாவணகரே-''முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் தான், 2023 கர்நாடக சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்திக்கும். அடுத்த முறை, முழு பெரும்பான்மையுடன் பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இதன் மூலம், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் முதல்வர் பொம்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.பல
 கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி,'' ; அமித் ஷா

தாவணகரே-''முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் தான், 2023 கர்நாடக சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்திக்கும். அடுத்த முறை, முழு பெரும்பான்மையுடன் பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இதன் மூலம், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் முதல்வர் பொம்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மதியம் ஹுப்பள்ளி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை, முதல்வர் வரவேற்றார்.இருவரும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தாவணகரே வந்தனர். ஜி.எம்.ஐ.டி., வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் அமித் ஷா பங்கேற்றார்.அப்போது, காந்தி பவன், போலீஸ் பப்ளிக் பள்ளி, ஜி.எம்., மத்திய நுாலகம் ஆகியவற்றை 'ரிமோட்' அழுத்தி திறந்து வைத்தார்.விவசாய தலைவர்பின், அவர் பேசியதாவது:முதல்வராக இருந்த எடியூரப்பா, மாபெரும் விவசாய தலைவர். விவசாயிகள், கிராமத்தினருக்காக சிறப்பான ஆட்சியை தந்தவர். கொரோனா தொற்று பரவலை சிறப்பான முறையில் நிர்வகித்தவர்.ஊரடங்கால் பாதித்த தலித்கள், ஆதிவாசிகள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோருக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.சுய விருப்பத்துடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மற்றொருவருக்கு வாய்ப்பு வழங்கினார். பின், பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேர்வு சரியேபொம்மையும் நல்லாட்சி செய்து வருகிறார். அவரது ஒவ்வொரு திட்டமும் மக்களை முன்னிறுத்தியே உள்ளது. அவரை முதல்வராக தேர்வு செய்தது சரியே என மக்கள் பேசி கொள்கின்றனர்.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையில் தான், 2023 கர்நாடக சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்திக்கும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பெறட்டும் என்று வாழ்த்துகிறேன்.அடுத்த முறை, முழு பெரும்பான்மையுடன் பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி.தடுப்பூசிகொரோனா பரவலை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக நிர்வகிக்கிறது. கர்நாடகாவில் இம்மாத இறுதிக்குள், 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். பா.ஜ., தொண்டர்கள், மக்களை அழைத்து வந்து தடுப்பூசி போட வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.புதிய காந்தி பவனில், சுதந்திர போராட்ட வீரர்களை அவர் கவுரவித்தார். 02.09.2021 / செய்தி: அர்வின்குமார்: 7:23 / எடிட்: ராமசுப்பிரமணியன், 7:28படம்: 3_Amit Sahபுதிய காந்தி பவன், போலீஸ் பப்ளிக் பள்ளி, ஜி.எம்., மத்திய நுாலகம் ஆகியவற்றை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். இடம்: தாவணகரே.----------------------------------------------திட்டவட்டம்!கர்நாடகாவில் அடுத்தும் பா.ஜ., ஆட்சி தான்பொம்மை, எடியூரப்பா தலைமையில் தான் தேர்தல்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X