பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திர போக்குவரத்து பேருந்தில் மீண்டும் பார்சல் சேவை துவக்கம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
மாதவரம்-ஆந்திர மாநில போக்குவரத்து பேருந்துகளில் பயணியரின் வசதிக்காக, 'கார்கோ' பார்சல் சேவை மீண்டும் துவங்கியது.சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்வோர் தங்களது உடைமைகளை அங்குள்ள சித்துார், நெல்லுார், குண்டூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட, 13 மாவட்டங்களுக்கும், திருப்பதி, விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய பெரிய நகரங்களுக்கும் பாதுகாப்பாக குறைந்த கட்டணத்தில்

மாதவரம்-ஆந்திர மாநில போக்குவரத்து பேருந்துகளில் பயணியரின் வசதிக்காக, 'கார்கோ' பார்சல் சேவை மீண்டும் துவங்கியது.

சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்வோர் தங்களது உடைமைகளை அங்குள்ள சித்துார், நெல்லுார், குண்டூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட, 13 மாவட்டங்களுக்கும், திருப்பதி, விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய பெரிய நகரங்களுக்கும் பாதுகாப்பாக குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல முடியும்.கொரோனா ஊரடங்கால், ஆந்திரா போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 'கார்கோ பார்சல்' சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பயணியரின் வசதிக்காக நேற்று முன்தினம் முதல் மீண்டும் இந்த சேவை துவங்கியது.'பார்சல்' சேவையில் 1 கிலோ 15 ரூபாய், 1 முதல் 6 கிலோ வரை 25 ரூபாய், 6 கிலோ முதல் 10 கிலோ வரை 30 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கான செய்திக் குறிப்பை, ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்திற்கான சென்னை, மாதவரம் மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 7382883013 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X