சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில்லி சிக்கனில் கிடந்த 'பிளாஸ்திரி' அனுமதியின்றி இயங்கிய உணவகம் மூடல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
தாம்பரம்--சில்லி சிக்கனில், 'பிளாஸ்திரி' கலந்த உணவு பொட்டலத்தை வழங்கிய உணவகம் குறித்து, வாடிக்கையாளர் அளித்த புகாரை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தினர். அதில், உணவகம் உரிய அனுமதியின்றி இயங்கியதால், அதை மூட உத்தரவிட்டனர். கத்தி வெட்டு'சில்லி சிக்கனுக்குள்' 'பிளாஸ்திரி' இருந்ததை கண்ட, வாடிக்கையாளர், உணவு

தாம்பரம்--சில்லி சிக்கனில், 'பிளாஸ்திரி' கலந்த உணவு பொட்டலத்தை வழங்கிய உணவகம் குறித்து, வாடிக்கையாளர் அளித்த புகாரை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தினர்.

அதில், உணவகம் உரிய அனுமதியின்றி இயங்கியதால், அதை மூட உத்தரவிட்டனர். கத்தி வெட்டு'சில்லி சிக்கனுக்குள்' 'பிளாஸ்திரி' இருந்ததை கண்ட, வாடிக்கையாளர், உணவு பாதுகாப்பு துறைக்கு, அளித்த புகாரின் வாயிலாக, உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தாம்பரம் அடுத்த வேங்கைவாசல், விக்னராஜபுரத்தைச் சேர்ந்தவர், தினகரன், 35; ஒலி, ஒளி அமைப்பாளராக உள்ளார். இவர், கடந்த 30ம் தேதி, பணி நிமித்தமாக வேங்கடமங்கலத்திற்கு சென்றார். அன்று இரவு 9:00 மணிக்கு, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், கண்டிகையில் உள்ள, 'பிஸ்மில்லா கேட்டரிங் சர்வீஸ்' எனும், தனியார் உணவகத்தில், நான்கு சிக்கன் ரைஸ், ஒரு சிக்கன் பிரியாணி, இரண்டு சில்லி சிக்கன் ஆகியவற்றை வாங்கினார்.அதில், ஒரு சில்லி சிக்கன் பாக்கெட்டில், காயம் ஆறுவதற்கு போடப்படும், மருத்துவ 'பிளாஸ்திரி' இருந்ததை கண்டார்.அவர், மீண்டும் கடைக்கு சென்று, கேட்டபோது ஊழியர் ஒருவருக்கு, முட்டைகோஸ் வெட்டும்போது, விரலில் கத்தி வெட்டியதில், காயம் ஏற்பட்டுள்ளது. அவர், அதற்காக போட்டிருந்த, 'பிளாஸ்திரி' எதிர்பாராதவிதமாக, சிக்கனில் விழுந்துவிட்டது என, உணவக ஊழியர்கள் கூறினர்.பினாயில்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறையின், புகார் எண்ணிற்கு, 'வாட்ஸ் - ஆப்' வாயிலாக 30ம் தேதி இரவே, தினகரன் புகார் அளித்தார். அதற்கு, 31ம் தேதி காலை, சிக்கனில் இருப்பது, 'பிளாஸ்திரி' இல்லை; அது, சிக்கன் தோல்' என, பதில் வந்தது.இதனால், அவர், காஞ்சிபுரம் மாவட்ட, உணவு பாதுகாப்பு அலுவலர், டாக்டர் அனுராதாவிடம், புகார் அளித்தார். நேற்று முன்தினம் மாலை, சம்பந்தபட்ட உணவகத்தில், அனுராதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், கடை உரிமம் இன்றி, இயங்கி வந்ததால், அதை மூட உத்தரவிட்டனர். மேலும், 31ம் தேதி சமைத்து, விற்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த, 3 கிலோ காலாவதியான உணவுகளை, 'பினாயில்' ஊற்றி அழித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின், ஆய்வு ஒருபுறம் திருப்தி அளித்திருந்தாலும், பாதுகாப்பு துறையின், பொதுவான எண்ணிற்கு அளிக்கப்பட்ட புகாருக்கு, முறையாக ஆய்வு நடத்தாமல், பதில் அளித்த, அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X