திருவொற்றியூர் டூ திருப்பதி பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூர் டூ திருப்பதி பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?

Added : செப் 03, 2021
Share
திருவொற்றியூர்-திருவொற்றியூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வடசென்னையின் கடைக்கோடி பகுதியான திருவொற்றியூரில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவை இருந்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் அவை நிறுத்தப்பட்டன.சமீபமாக, நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக

திருவொற்றியூர்-திருவொற்றியூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வடசென்னையின் கடைக்கோடி பகுதியான திருவொற்றியூரில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவை இருந்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் அவை நிறுத்தப்பட்டன.சமீபமாக, நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக துவக்கப்படுகின்றன. அதன்படி, 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை இணைக்கும் திருவொற்றியூர் - கோவளம் வரை செல்லும் பேருந்து, சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது.மேலும், நிறுத்தப்பட்ட அம்பத்துார் தொழிற்பேட்டை, தாம்பரம், கோயம்பேடு வழித்தட பேருந்துகளும் மீண்டும் இயக்கப்பட்டன.திருவொற்றியூரில் இருந்து பிற மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை, பூம்புகார், திருச்செந்துார், வேளாங்கண்ணி, ஓசூர், பாண்டிச்சேரி, திருப்பதி, நாகர்கோவில், சேலம் உட்பட, 15 வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன.பெரும்பாலானவை வருவாய், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் மற்றும் கோவைக்கு, இரு தினங்களுக்கு முன் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன.இதனிடையே, திருப்பதி செல்லும் வடசென்னை வாசிகள், மாதவரம் பேருந்து நிலையம் சென்று செல்ல வேண்டியுள்ளது.அதில் சில பேருந்துகளை, திருவொற்றியூரில் இருந்து திருப்பதிக்கு இயக்கினால், ஒட்டுமொத்த வடசென்னை வாசிகளும் பயன்பெறுவர். இது குறித்து, கடந்த நிகழ்ச்சியின் போதே தொகுதி எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.அதன்படி, திருப்பதிக்கு விரைவாக பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X