பொது செய்தி

தமிழ்நாடு

ஓவியங்களால் ஜொலிக்கும் மாநகராட்சி கட்டடங்கள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
மணலிபுதுநகர்-'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களால், மணலிபுதுநகரில் உள்ள மாநகராட்சி கட்டடங்கள் கண்ணை கவருகின்றன.சென்னை மாநகராட்சி முழுதும், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், மாநகராட்சி கட்டடங்கள் வண்ணம் தீட்டப்பட்டு, அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில், மணலி மண்டலம், 15 வார்டில், ஐந்து இடங்களில், வண்ண ஓவியங்கள்

மணலிபுதுநகர்-'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களால், மணலிபுதுநகரில் உள்ள மாநகராட்சி கட்டடங்கள் கண்ணை கவருகின்றன.சென்னை மாநகராட்சி முழுதும், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், மாநகராட்சி கட்டடங்கள் வண்ணம் தீட்டப்பட்டு, அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில், மணலி மண்டலம், 15 வார்டில், ஐந்து இடங்களில், வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதன்படி, மணலிபுதுநகர் ஆரம்ப சுகாதார கட்டட மதில் சுவரில், பாரம்பரிய விளையாட்டு, புராண கதைகளை வலியுறுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.அதே போல், நுாலக மதில் சுவரில், புத்தக வாசிப்பை வலியுறுத்தும் வகையில், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.இரு பூங்காக்கள், அம்மா உணவகம் என, மாநகராட்சி சார்ந்த கட்டடங்கள் முழுதும், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது, மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X