தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க மரத்தடி வகுப்பு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
அம்பத்துார்-சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில், பள்ளிகளில் மரத்தடி வகுப்புகளை நடத்தலாம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மே மாதம் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. மாணவ - மாணவியருக்கு 'ஆன்லைன்' மூலம் பாடம் நடத்தப்பட்டது. ஆனாலும், அதில் இணையதள இணைப்பு கிடைப்பது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள்

அம்பத்துார்-சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில், பள்ளிகளில் மரத்தடி வகுப்புகளை நடத்தலாம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மே மாதம் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. மாணவ - மாணவியருக்கு 'ஆன்லைன்' மூலம் பாடம் நடத்தப்பட்டது. ஆனாலும், அதில் இணையதள இணைப்பு கிடைப்பது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் தொடர்ந்தன.

இந்நிலையில், மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டும், தொற்று குறைந்ததாலும், நேற்று முன்தினம் முதல் பள்ளி கல்லுாரிகள் திறக்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2, வகுப்புகள் வரையான மாணவ - மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.ஆனாலும், பெரும்பாலான பள்ளிகளில் நீடிக்கும் இடநெருக்கடி, காற்றோட்டமற்ற சூழல் ஆகியவற்றின் மூலம் மூன்றாவது அலைக்கான கொரோனா பரவலால், தங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

பள்ளி நிர்வாகம் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் மாணவ - மாணவியரின் உடல் நலன் கருதியும், பெரிய மரங்கள் உள்ள பள்ளிகளில் மரத்தடி வகுப்புகளை நடத்தலாம்.அதன் மூலம் சமூக இடைவெளி, காற்றோட்டமான சுற்றுச்சூழலில் மாணவர்கள் கல்வி கற்க முடியும்.மேலும், கொரோனா பரவலை தவிர்த்து, சுகாதார பாதுகாப்பும் அதிகரிக்கும். அதுவரை பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பது, மின் விசிறி உள்ளிட்ட உபகரணங்களை பொருத்துவது போன்ற விடுபட்ட பராமரிப்பு பணிகளை பள்ளி நிர்வாகங்கள் செய்து முடிக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X