பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளி வகுப்பறைகளில் மனதை ஈர்க்கும் தத்ரூப ஓவியங்கள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை--வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பள்ளி வகுப்பறைகள், சுவர் ஓவியங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளன.சென்னையை அழகுபடுத்தும் வகையில் மாநகராட்சியினர், பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 8வது தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்
 மாநகராட்சி பள்ளி வகுப்பறைகளில் மனதை ஈர்க்கும் தத்ரூப ஓவியங்கள்

வண்ணாரப்பேட்டை--வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பள்ளி வகுப்பறைகள், சுவர் ஓவியங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளன.சென்னையை அழகுபடுத்தும் வகையில் மாநகராட்சியினர், பல்வேறு இடங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 8வது தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.இப்பள்ளியில், 3 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக 12 வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும், மூன்று மாடியில் புதிய கட்டடம், ஆய்வக கட்டடம் ஆகியவை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.மேலும், வகுப்பறைகளை அழகுபடுத்தும் வகையில், வகுப்பறை சுவரில் ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது.இதில் மான், மயில், யானை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பழங்கள், காய்கறிகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.இப்பள்ளியின் புனரமைப்பு பணிகளை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, நேற்று ஆய்வு செய்தார்.பள்ளியில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், பொதுமக்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X