பாழடைந்த நிலையில் மழை நீர் கால்வாய்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாழடைந்த நிலையில் மழை நீர் கால்வாய்கள்

Added : செப் 03, 2021
Share
குன்றத்துார்--குன்றத்துார் பேரூராட்சியில், பல இடங்களில், முறையற்ற வகையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள், உடைந்தும், சரிந்தும் பாழடைந்து காணப்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில், பல இடங்களில் மழை நீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.இவை முறையாக கட்டப்படாததால், ஜெகநாத புரம், சேக்கிழார் நகர், பாலவராயன்
  பாழடைந்த நிலையில் மழை நீர் கால்வாய்கள்

குன்றத்துார்--குன்றத்துார் பேரூராட்சியில், பல இடங்களில், முறையற்ற வகையில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள், உடைந்தும், சரிந்தும் பாழடைந்து காணப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில், பல இடங்களில் மழை நீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.இவை முறையாக கட்டப்படாததால், ஜெகநாத புரம், சேக்கிழார் நகர், பாலவராயன் குளக்கரை தெரு, சம்மந்தம் மற்றும் மேத்தா நகர் பகுதிகளில், மழை நீர் கால்வாய்கள் சரிந்து விட்டன.மேத்தா நகரில், இருக்கும் கால்வாய் மீது, ஜல்லி கொட்டி உயர்த்தி விட்டனர். எந்த ஒரு பிடிப்பும் இல்லாததால், இது, காலப்போக்கில் சரிந்து வீணாகியுள்ளது. இதனால் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பேரூராட்சி பகுதிகளில் முறையற்ற வகையில் கட்டப்பட்டுள்ள கால்வாய்களை கணக்கெடுத்து, அதை சரிசெய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X