பொது செய்தி

தமிழ்நாடு

3 லட்சம் குடியிருப்புகளில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை--சென்னை குடிநீர் வாரியம் சார்பில், இரண்டே நாட்களில், 2.81 லட்சம் குடியிருப்புவாசிகளிடம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்திடும் வகையில்,

சென்னை--சென்னை குடிநீர் வாரியம் சார்பில், இரண்டே நாட்களில், 2.81 லட்சம் குடியிருப்புவாசிகளிடம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின், 30ம் தேதி மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை துவக்கி வைத்தார்.மழை நீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 200 பணிமனைகளில், தலா, இரண்டு உதவி மையங்கள் வீதம், 400 உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இம்மையங்களில், 2,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர், தண்ணீர் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டு, மக்களிடம் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 7,026 தெருக்களில் வசிக்கும், 2 லட்சத்து, 81 ஆயிரத்து, 747 குடியிருப்புவாசிகளிடம், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள், அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாக சென்று, மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு அவசியத்தை உணர்த்துவதோடு, வீடுகளில் பயன்படுத்த கூடிய நீரை சேமிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும், பொதுமக்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.களப்பணிகளை கண்காணிப்பதற்காக, மண்டலம் வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வருகை தரும் களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நடவடிக்கைஅண்ணாநகர் மண்டலத்தில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மகளிர் சுய உதவி குழுவினர் வாயிலாக, 10 ஆயிரம் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குடிநீரில் தேவையான குளோரின் உள்ளதா என்பதையும் நவீன கருவியை வைத்து பரிசோதனை செய்தனர். அதுமட்டுமின்றி, பொதுமக்கள் குடிநீர் கலங்கலாக வருவதாக அளித்த புகாருக்கும், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X