பொது செய்தி

தமிழ்நாடு

புது காவல் நிலைய கட்டடம்: ஏ.டி.ஜி.பி., திடீர் ஆய்வு

Added : செப் 03, 2021
Share
Advertisement
நெசப்பாக்கம்-நெசப்பாக்கத்தில் நடந்து வரும், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய பணிகளை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக ஏ.டி.ஜி.பி., விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையம், போதிய இடவசதியில்லாத இடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, நெசப்பாக்கம் வள்ளி அவென்யூவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான

நெசப்பாக்கம்-நெசப்பாக்கத்தில் நடந்து வரும், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய பணிகளை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக ஏ.டி.ஜி.பி., விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையம், போதிய இடவசதியில்லாத இடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, நெசப்பாக்கம் வள்ளி அவென்யூவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட, கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.காவல் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக ஏ.டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன், கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.அவருடன், செயற்பொறியாளர் நாச்சிமுத்து, கண்காணிப்பு பொறியாளர் குமரேசன், தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.இது குறித்து ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில், ''எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய, புது கட்டடம், 1.67 கோடி செலவில், 'லிப்ட்' வசதியுடன் மூன்று மாடிகளாக கட்டப்பட்டு வருகின்றன.''இந்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X