டில்லி கலவர வழக்கு; 4 எப்.ஐ.ஆர்., ரத்து

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'குடியுரிமை சட்டம் தொடர்பாக டில்லியில் நடந்த கலவரத்தில் ஒரு சம்பவத்துக்கு ஐந்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடியாது' என, கூறிய டில்லி உயர் நீதிமன்றம், நான்கு எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்தது.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லியில் கடந்தாண்டு பிப்.,ல் நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். மவுஜ்புர் என்ற இடத்தில் உள்ள
Delhi riots, FIRs, Delhi HC, northeast violence

புதுடில்லி: 'குடியுரிமை சட்டம் தொடர்பாக டில்லியில் நடந்த கலவரத்தில் ஒரு சம்பவத்துக்கு ஐந்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடியாது' என, கூறிய டில்லி உயர் நீதிமன்றம், நான்கு எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்தது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லியில் கடந்தாண்டு பிப்.,ல் நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். மவுஜ்புர் என்ற இடத்தில் உள்ள வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் அடிர் என்பவர் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


latest tamil news



இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை, ஐந்து பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், 'ஒரு சம்பவம் தொடர்பாக ஐந்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது சட்டத்துக்கு புறப்பானது. அனைத்து அறிக்கையிலும் உள்ள தகவல்கள் ஒன்று போல உள்ளன. எனவே, நான்கு எப்.ஐ.ஆர்.,கள் ரத்து செய்யப்படுகின்றன' என, உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
03-செப்-202108:35:48 IST Report Abuse
duruvasar இது நல்லா இருக்கே. ஒரே நாளில் ஒருவர் பல குற்றங்களை செய்தாலும் ஒரு எஃப்பையார்தான் போடனுமா ? மணல்கயிறு படத்தில் ஒரே நாளில் ஒருவரே நடத்திய 4 குற்றங்களுக்கு 4 கேஸ் போட்டு போலீஸ் நடவடிக்கை எடுப்பார்கள். சட்டம் தெரியாத படதயாரிப்பாளர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X