போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

Added : செப் 03, 2021
Share
ராயப்பேட்டை--ராயப்பேட்டையில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மென்பொறியாளரை, போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னையா, 75; காவலாளி. இவர், நேற்று காலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரது இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன.

ராயப்பேட்டை--ராயப்பேட்டையில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மென்பொறியாளரை, போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னையா, 75; காவலாளி. இவர், நேற்று காலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரது இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய மென்பொறியாளர் சுதாகர், 52, என்பவரை கைது செய்தனர். மேலும், அவரது காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X