பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மனைவி இறப்பு கணவருக்கு ரூ.25 லட்சம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை-விபத்தில் மனைவியை இழந்தவருக்கு, 25.28 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் ஜீவிதா, 25; ஓட்டல் தொழிலாளி. இவர், 2017 அக்டோபரில், துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர்., சாலையில், பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து,

சென்னை-விபத்தில் மனைவியை இழந்தவருக்கு, 25.28 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் ஜீவிதா, 25; ஓட்டல் தொழிலாளி. இவர், 2017 அக்டோபரில், துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர்., சாலையில், பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த சென்னை மாநகர பேருந்து, ஜீவிதா பயணித்த பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.மனைவி இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஜீவிதாவின் கணவர் ராஜா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது. விசாரணையில், மனுதாரர் மனைவி சென்ற பைக் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகர பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 25.28 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'லிபர்டி விடிகான் ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம், 90 சதவீதமும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், 10 சதவீதமும் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X