புழுதி மண்டலமாக மாறிய ஆற்காடு சாலை

Added : செப் 03, 2021
Share
Advertisement
வளசரவாக்கம்-குடிநீர் வாரி பணிகளால், ஆற்காடு சாலை புழுதி மண்டலமாக மாறிஉள்ளது. சாலையும் சரிவர சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.வளசரவாக்கம் பகுதி மக்களுக்கு, நகராட்சியாக இருந்தபோது போடப்பட்ட பி.வி.சி., குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வளசரவாக்கம் ராமகிருஷ்ணா நகரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு
 புழுதி மண்டலமாக மாறிய ஆற்காடு சாலை

வளசரவாக்கம்-குடிநீர் வாரி பணிகளால், ஆற்காடு சாலை புழுதி மண்டலமாக மாறிஉள்ளது. சாலையும் சரிவர சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.வளசரவாக்கம் பகுதி மக்களுக்கு, நகராட்சியாக இருந்தபோது போடப்பட்ட பி.வி.சி., குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வளசரவாக்கம் ராமகிருஷ்ணா நகரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், புதிதாக குழாய் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக, ஆற்காடு சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் அமைக்கும் பணி நடந்தது.இதனால், இச்சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும், சாலை முழுதும் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையோர குடியிருப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றிலும் துாசி படர்ந்து விடுகிறது.எனவே, குடிநீர் வாரியம் பணிகளை விரைந்து முடிப்பதோடு, நெடுஞ்சாலை துறை உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் வாரிய பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.'குறுக்கு சாலைகளில் இணைப்பு வழங்கும் பணிகள் மீதமுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து சாலையை ஒப்படைத்ததும், உடனடியாக சீர்செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X