தமிழ்நாடு

மாநகரில் 3வது நாளாக தொடர் மழை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: வெள்ள அபாயம்!

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூரில் கனமழை தொடர்வதால், நொய்யல் ஆறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடை அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் பல இடங்களில், கடந்த ஆக., 31 மற்றும் நேற்று முன்தினம்(செப்., 1ம் தேதி) கன மழை பெய்தது. நொய்யல் ஆறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடை அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மாநகரில் 3வது நாளாக தொடர் மழை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: வெள்ள அபாயம்!

திருப்பூர்;திருப்பூரில் கனமழை தொடர்வதால், நொய்யல் ஆறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடை அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் பல இடங்களில், கடந்த ஆக., 31 மற்றும் நேற்று முன்தினம்(செப்., 1ம் தேதி) கன மழை பெய்தது. நொய்யல் ஆறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடை அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வருவாய்த்துறையினர் நேரில் சென்று, தாழ்வான பகுதியில் வசிக்கும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர். இரவு நேரம் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பாகிவிடும் என்பதால், வி.ஏ.ஓ., உள்ளிட்டோர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால், உடனடியாக மாநகராட்சி பள்ளிகளில், மக்களை தஞ்சமடைய செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாண்டியன் நகர், அண்ணா நகர், பிச்சம்பாளையம், போயம்பாளையம், திருமுருகன்பூண்டி, குமார் நகர், காலேஜ் ரோடு, முருகம்பாளையம் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அவ்வப்போது மழை தலைகாட்டியதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மங்கலம், எஸ்.ஆர்., நகர், ஆண்டிபாளையம், கருவம்பாளையம், தென்னம்பாளையம், பெரிச்சிபாளையம் பகுதிகளில், லேசான மழை பெய்தது. நேற்று முன்தினம், கனமழை பெய்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.பகல் முழுவதும் லேசான மழை பெய்து கொண்டே இருந்ததால், சாலையோர பழ வியாரிகள், வெங்காயம் வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளின் வியாபாரம் பாதித்தது.'நீந்தும்' பஸ்கள்திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.ஆனால், பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் - பி.என்., ரோடு இடையேயான இணைப்பில், ஆறடி இடைவெளியில் மட்டும் கான்கிரீட் தளம் போடாமல் அப்படியே விட்டுள்ளனர்.
பஸ் சென்று வந்ததில் அந்த இடம் குழிபோல் மாறி விட்டது. தொடர் மழையால், மழைநீர் வழிந்தோட வழியின்றி நுழைவுவாயில் தேங்கி துவங்கி விட்டது. இதனால், பஸ் ஸ்டாண்ட்டுக்குள் வரும் போது, வெளியேறும் போதும் தேங்கியுள்ள நீரில் பஸ்கள் நீந்தி செல்ல வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-202108:14:00 IST Report Abuse
அப்புசாமி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. வீட்டு வாசலுக்கே பைப் இல்லாம தண்ணீர் வசதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X