பொது செய்தி

தமிழ்நாடு

620 போலீசாருக்கு பதவி உயர்வு சென்னையில் பயிற்சியளிக்க கோரிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை மாநகர காவல் துறையில், 620 பேர் உதவி ஆய்வாளர் பயிற்சி பெற உள்ள நிலையில், சென்னையில் பயிற்சி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகர காவல் துறையில் பணி புரியும், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என, 620 உதவி ஆய்வாளர் பதிவு உயர்வு பெற்று, பயிற்சிக்கு செல்ல உள்ளனர்.இவர்களுக்கு, வேலுார், விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள

சென்னை-சென்னை மாநகர காவல் துறையில், 620 பேர் உதவி ஆய்வாளர் பயிற்சி பெற உள்ள நிலையில், சென்னையில் பயிற்சி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகர காவல் துறையில் பணி புரியும், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என, 620 உதவி ஆய்வாளர் பதிவு உயர்வு பெற்று, பயிற்சிக்கு செல்ல உள்ளனர்.இவர்களுக்கு, வேலுார், விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில், இம்மாதம், 15ம் தேதி முதல் உதவி ஆய்வாளர் பயிற்சி துவங்க உள்ளது.இதுவரை, சென்னை மாநகர காவல் துறையினருக்கு, சென்னையில் உதவி ஆய்வாளர் பயிற்சி நடத்தப்பட்ட நிலையில், தற்போது பிற மாவட்டங்களில் போடப்பட்டுள்ளது.உதவி ஆய்வாளர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட, 620 பேரில், பெரும்பாலானோர், 50 வயதை கடந்தவர்கள். மேலும், ரத்த அழுத்தம், நீரிழிவு என, பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், சென்னையில் உதவி ஆய்வாளர் பயிற்சி வழங்க, அரசு மற்றும் தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X