பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மைதானத்தில் துாய்மை பணி விறு விறு

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை---சென்னையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், புதர்மண்டி கிடந்தது குறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மைதானத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கிஉள்ளது.தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் பள்ளி திறந்ததும், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், சென்னையில் உள்ள அரசு பள்ளிகளை

சென்னை---சென்னையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், புதர்மண்டி கிடந்தது குறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மைதானத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கிஉள்ளது.தமிழகத்தில் ஐந்து மாதங்களுக்கு பின், பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் பள்ளி திறந்ததும், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், சென்னையில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்தார். ராயப்பேட்டையில் உள்ள அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலை பள்ளியில், அமைச்சர் மகேஷ், சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., எழிலன் ஆகியோர், மாணவியரை சந்தித்து வாழ்த்து கூறினர்.இந்நிலையில், அந்த பள்ளி மைதானம் மற்றும் வளாகம் புதர்மண்டி கிடந்தன. அவற்றின் அருகில் வகுப்பறைகளும் இருந்தன. இதனால் விஷ ஜந்துகளால் மாணவியருக்கு ஆபத்து உள்ளதாக, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இந்த செய்தி, அமைச்சரின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, அங்கு சுத்தப்படுத்தும் பணி நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, வகுப்பறைகள் உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் புற்கள் அகற்றப்பட்டன.அடர்ந்த காடு போல் காட்சியளிக்கும் மைதானத்தின் மற்ற பகுதிகளில் மரங்களை மட்டும் விட்டு, விட்டு, தரைப்பகுதியை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் முழுமையாக சுத்தம் செய்ய உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X