பொது செய்தி

தமிழ்நாடு

பிரதான குழாய் உடைப்பு: குடிநீர் வீண்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர் 12வது வார்டு, முருங்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் வழியாக பூத்தார் தியேட்டர் ரோடு மற்றும் காலேஜ் ரோடு சென்று சேரும் ரோடு உள்ளது.இந்த ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் அதிகளவில் வெளியேறி ரோட்டில் பாய்ந்தும், குளம் போல் தேங்கியும் நிற்கிறது.அதே போல், காலேஜ் ரோடு, சந்திரகாவி பள்ளி அருகே பிரதான குடிநீர்
பிரதான குழாய் உடைப்பு: குடிநீர் வீண்

திருப்பூர் 12வது வார்டு, முருங்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் வழியாக பூத்தார் தியேட்டர் ரோடு மற்றும் காலேஜ் ரோடு சென்று சேரும் ரோடு உள்ளது.
இந்த ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் அதிகளவில் வெளியேறி ரோட்டில் பாய்ந்தும், குளம் போல் தேங்கியும் நிற்கிறது.அதே போல், காலேஜ் ரோடு, சந்திரகாவி பள்ளி அருகே பிரதான குடிநீர் குழாய் பதிப்பு பணிக்கு குழி தோண்டப்பட்டது. இதனால், காலேஜ் ரோடு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் அதிகளவில் குடிநீர் வெளியேறி ரோட்டில் பாய்கிறது.

குழாய் உடைப்பு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் சரி செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். இதனால், குடிநீர் வீணாவதும், ரோடு சேதமடைவதும் தடுக்கப்படும்.------2 படங்கள்திருப்பூர் குமார் நகர் இட்டேரி ரோடு மற்றும் காலேஜ் ரோடு மரக்கடை ஸ்டாப் பகுதிகளில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X