பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அவசியம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை-வேளச்சேரி - கடற்கரை பாதையில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில், பயணியர் தண்டவாளத்தை கடப்பது அதிகரித்துள்ளது. எனவே, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.வேளச்சேரி - கடற்கரை நிலையம் பாதையில் உள்ள, பூங்கா ரயில் நிலையம் வழியாக, பயணியர் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அருகில், மெட்ரோ ரயில் நிலையம், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் புறநகர் மின்சார

சென்னை-வேளச்சேரி - கடற்கரை பாதையில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில், பயணியர் தண்டவாளத்தை கடப்பது அதிகரித்துள்ளது. எனவே, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.வேளச்சேரி - கடற்கரை நிலையம் பாதையில் உள்ள, பூங்கா ரயில் நிலையம் வழியாக, பயணியர் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அருகில், மெட்ரோ ரயில் நிலையம், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலையங்களுக்கு, இந்நிலையம் வழியாக அதிகமானோர் வந்து செல்வதால், எந்நேரமும் கூட்டம் அதிகம் உள்ளது.இந்நிலையத்தில், பயணியர் ஆபத்தாக தண்டவாளத்தை கடப்பது அதிகரித்துள்ளது. அருகில், சுரங்கப்பாதை இருந்தும், பயணியர் அலட்சியமாக தண்டவாளத்தை கடந்து, சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ நிலையம், செல்வது தொடர்கிறது. தண்டவாளத்தை கடப்பவர்களை பிடித்து அபராதம் விதித்தால், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும்.ஆபத்தாக தண்டவாளத்தை கடப்பதும், விபத்தும் தடுக்கப்படும். ரயில்வே பாதுகாப்பு படையினர், போலீசார், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X