பொது செய்தி

தமிழ்நாடு

மடிப்பிச்சை எடுத்து... பூவோடு ஏந்தி... தேங்காய் உடைத்து...!

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழக அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில், 21 இடங்களில் ஹிந்து முன்னணியினர், இறைவனிடம் முறையீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் குலாலர் விநாயகர் கோவில் முன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் போராட்டம் நடந்தது. பெண்கள் மண்ணை வாரி
 மடிப்பிச்சை எடுத்து... பூவோடு ஏந்தி... தேங்காய் உடைத்து...!

திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகள் வைக்க தமிழக அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில், 21 இடங்களில் ஹிந்து முன்னணியினர், இறைவனிடம் முறையீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் குலாலர் விநாயகர் கோவில் முன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் போராட்டம் நடந்தது. பெண்கள் மண்ணை வாரி துாற்றினர். மறியலிலும் ஈடுபட்டனர்.மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில், புஷ்பா தியேட்டர் சந்திப்பில் போராட்டம் நடந்தது. சிறுவர், சிறுமியர் விநாயகர் வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்து முறையிடும் நிகழ்வு நடந்தது.மாநில செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் டவுன்ஹால் விநாயகர் கோவில் முன்பு நடந்த நிகழ்ச்சியில், மடிப்பிச்சை எடுத்து, பூவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பல்லடம்:பல்லடம், அருள்புரம் மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாசல மூர்த்தி, ஒன்றிய தலைவர் குரு, ஒன்றிய பொது செயலாளர் கார்த்தி, பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.மாநில நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்து பேசினார். மாரியம்மன் கோவிலில், எலுமிச்சை குத்தியும், தேங்காய் உடைத்தும், பிரார்த்தனை செய்தனர்.அவிநாசி:அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன் நடந்த போராட்டத்துக்கு மாநகர மாவட்ட செயலாளர் கேசவன், தலைமை வகித்தார். அவிநாசி நகர தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரசாந்த், துணை தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், கருவலுார் மாரியம்மன் கோவில் முன் போராட்டம் நடந்தது.கொடுவாய்:கொடுவாய் ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், பெரிய பெருமாள் கோவிலில் முறையீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய தலைவர் சரவணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொதுச் செயலாளர் ஆனந்த், துணை தலைவர் சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.வெள்ளகோவில்:வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி கோவில், சோளீஸ்வரர் சுவாமி கோவில், வரதராஜ பெருமாள் கோவில், நாட்ராயன் கோவில், முத்துார் ஈஸ்வரன் கோவில் ஆகிய ஐந்து கோவில்களின் முன் கோரிக்கை முறையிடும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில், ஒன்றிய தலைவர் கோபிநாத், நகர தலைவர் சதீஸ்வரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார் முன்னிலையில் போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X